வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் போராட்டம்

மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்
தெரிவித்துள்ளார்.
சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்த தெரிவித்த அவர்,
‘வாக்காளர்களின் பெயர்களை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் கூறி வருகிறார்கள்.
போலியான காரணங்களை கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக் குரிமையை நீக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
அதேநேரத்தில் ஒரே நபரின் பெயரை பல இடங்களில் சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஆட்சியாளர் கள் குறுக்கு வழியில் வெல்வதற்கு துடிக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால் முறையான பதில் அளிக்க முடியவில்லை.i
05 ஆண்டுக்கு ஒருமுறை தலைவிதியை நிர்ணயிக்கும் வாக்குகளை நாம் யாருக்கு போட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று யார் ஓட்டு போட வேண்டும் என்பதையே அதிகார வர்க்கம் தீர்மானிக்கும் நிலை உள்ளது.
எனவே இதனை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டும். தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள். இதன் மூலமாக இளம் வாக்காளர்கள் முதல் அனைவருக்குமான வாக்குரிமையும் பறிபோகும் சூழல் உள்ளது.
எனவே நாம் அனைவரும் வாக்குகளையும் உறுதி செய்து 2026 தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவதற்கான உரிமையை பெற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்று 2026 தேர்தலில் நமது தலைவர் முதலமைச்சராவது உறுதி” என்றார்.
