கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் கொஸ்கொட பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது நோய்வாய்ப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்தது அவர் கொஸ்கொட வைத்தியசாலையிவல் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் பொலிஸார் விடயங்களை முன்வைத்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

 

 

Share This