
சமூக ஊடகங்களினூடாக முட்டை விலைகளை தினமும் அறியப்படுத்த நடவடிக்கை
சமூக ஊடகங்கள் மூலம் முட்டை விலைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியப்படுத்தும் அமைப்பொன்றை உருவாக்க
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனூடாக தினமும் முட்டை விலைகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர்கள் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சந்தையில் முட்டையின் விலை தற்போது 28 முதல் 32 ரூபாய் வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES இலங்கை
