போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு புடினுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழுத்தம்

நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
புடின் இதற்கு மறுப்பு தெரிவித்தால் ரஷ்யா மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதன் ஒரு பகுதியாக 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்துள்ளனர், மாஸ்கோ மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவுடனான இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைன் இணக்கம் தெரிவித்துள்ளது.