தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம்

தமிழக கடற்றொழிலாளர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 07 கடற்றொழிலாளர்கள் , இலங்கைக் கடற்படையினரால் மன்னார் கடற்பிராந்தியத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களின் படகொன்றும் பறிமுதல் வெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share This