180 சுற்றுலாப் பயணிகளுடன் விமான நிலையத்தை வந்தடைந்த பல்கேரியா ஏர் விமானம்

180 சுற்றுலாப் பயணிகளுடன் விமான நிலையத்தை வந்தடைந்த பல்கேரியா ஏர் விமானம்

பல்கேரியா ஏர் விமானம் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க
சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவை குறிக்கும் வகையில், இந்த விமானம் காலை 06:30 மணிக்கு தரையிறங்கியது.

நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளூர் பொருளாதாரத்திற்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதுடன் சுற்றுலா மேற்கொள்வதற்கு இலங்கை சிறந்த இடம் என்ற நற்பெயரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This