காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிக்கும் எனவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் இராஜதந்திர உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் காசாவில், உடனடி போர் நிறுத்தத்துக்கும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This