
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 08 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது.
சூப்பர் 04 சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வியடைந்த பின்னர், இலங்கை புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை பாகிஸ்தான் இறுதி இடத்திலும் உள்ளது.
இன்றைய போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணி வெளியேற அதிக வாய்ப்புள்ளது.
இலங்கை வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
CATEGORIES விளையாட்டு
