இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (18) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இயக்கப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, பதுளை, பெலியத்த, காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களிலிருந்து கொழும்புக்கு இந்த ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

CATEGORIES
TAGS
Share This