போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய
கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 8,068 சாரதிகளுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 401 பேரும், கவனக்குறைவாகவும் ஆபத்தானமுறையிலும் வாகனம் செலுத்திய 53, பேரும், அதிவேகமாக வாகனத்தை செலுத்திய 48 பேரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் பொது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 1,350 பேரும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக 865 பேரும் ஏனைய குற்றங்களுக்கான 5,351 பேரும் உள்ளடங்குகின்றனர்.

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share This