விசேட சோதனை நடவடிக்கை – 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்

விசேட சோதனை நடவடிக்கை – 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்

விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் 16 கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி தயாரிப்புகளில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல் இன்றி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் ஏனைய
கடைகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் சந்தையில் நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையால் விசேட
சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

Share This