க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்வு பெறுபேறுகள் வெளியிடப்படும் என சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களாக பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS
Share This