பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வெளிநபர் ஒருவர் வைத்தியரை அவரது பணி அறைக்குள் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அண்மை காலங்களில்
இலங்கையில் வைத்தியசாலைகளின் உள்ளே இவ்வாறான சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை.
அரச வைத்தியசாலையில் பணியில் இருக்கும் வைத்தியர் ஒருவர் இலக்கு வைக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.
பொது சேவையில் உள்ள பெண் அதிகாரிகளும் கூட பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொள்கின்றனர்.
கூட இதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர், இது பொது பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் இதன்போது எச்சரித்தார்.
இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவற்கு எதிர்க்கட்சியின் ஆதரவை சஜித் பிரேமதாச உறுதி செய்தார்.