சீரற்ற வானிலையால் பலர் உயிரிழப்பு – ஒரு மில்லியன் ரூபா வழங்க ஜனாதிபதி பணிப்பு

சீரற்ற வானிலையால் பலர் உயிரிழப்பு – ஒரு மில்லியன் ரூபா வழங்க ஜனாதிபதி பணிப்பு

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )