வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் ““முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் கீழ் கொழும்பு மாவட்ட நடவடிக்கையில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
