
அதிக விலைக்கு காய்கறிகளை விற்ற வர்த்தகர்கள் கைது
நுகர்வோரை தவறாக வழிநடத்தி, விலைகளைக் காட்சிப்படுத்தாமல் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த ஏழு வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் கைது செய்துள்ளது.
நுகர்வோர் புகார்களின் அடிப்படையில் கம்பஹா, வெயங்கொட, மினுவங்கொட மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள 25 காய்கறி கடைகள் ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
நுகர்வோர் விவகார அதிகாரசபைத் தலைவர் ஹேமந்த சமரக்கோன் மற்றும் கம்பஹா அரசாங்க அதிபர் லலிந்த கமகே ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கம்பஹா மாவட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனைகளை மேற்கொண்டது.
கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக விலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருந்தமை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குகள் தொடரப்பட உள்ளன.
மேலும் அவர்கள் மினுவங்கொட, கம்பஹா மற்றும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு உட்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய கடினமான நேரத்தில் நுகர்வோர் சுரண்டலைத் தடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்த இந்த நடவடிக்கை சமூகத்தால் பாராட்டு பெற்றுள்ளது.
