விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்

விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்

அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அண்மையில் கட்சியின் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்த அவர் இன்று காலை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நான்கு மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This