உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு

உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு

உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.

ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் நிலவும் உப்புப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு
மக்களுக்குக் கிடைத்துள்ளது.

நாட்டில் வருடாந்திர உப்பு நுகர்வு சுமார் 180,000 மெட்ரிக் தொன் ஆகும், மேலும் கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு அறுவடை வேகமாகக் குறைவடைந்துள்ளது.

நாட்டில் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உள்நாட்டு நுகர்வுக்காக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இதனிடையே, அம்பாறை, சம்மாந்துறை மற்றும் எரகம பகுதிகளில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பமான நிலையில், வியாபாரிகள் 85 ரூபா முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக அரசாங்கம் இன்னும் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கவில்லை என்று முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Share This