அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

இலங்கையில் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் இன்று மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.
மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50 வீதமாக அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும் என கூறிய அவர் 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் மட்டத்தில் பேணி வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலவாணி உயர் மட்டத்தில் காணப்பட வேண்டும் என்பதுடன் இதற்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 5 வீத பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.