ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுவதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
…………
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையான ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின்
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில்
குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
மேலும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது
அதனைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப்
பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து
குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.