இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்குமாறு ராகுல் காந்தி  வலியுறுத்தல்

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்குமாறு ராகுல் காந்தி  வலியுறுத்தல்

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி  வலியறுத்தியுள்ளார்.

அவர் தனது எகஸ் தளத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாபில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதென்றும்  ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கடினமான காலங்களில்,மத்திய அரசின் தீவிர உதவியும் மிகவும் அவசியம் எனவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பில் உள்ளதாகவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக சிறப்பு நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Share This