மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலத்திற்கு முன்வைக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவுக்கான பொது கலந்தாய்வு 2025 டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஜனவரி 08 ஆம் திகதி வரை எழுத்துப்பூர்வ கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், வாய்வழி கருத்து கோரல் 09 அமர்வுகள் இடம்பெறவுள்ளன

எழுத்துப்பூர்வ கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 076 427 1030 என்ற WhatsApp இலக்கத்திற்கு அல்லது தபால் மூலம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பலாம்.

Share This