இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

தம்புள்ளையில் உள்ள உணவகமொன்றில் இரண்டு லட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
சந்தேக நபர் உணவகத்தின் பணியாளர் ஒருவரை நேற்றைய தினம் தனது வீட்டிற்கு அருகில் அழைத்து பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவகத்தின் பணியாளர்கள் வருடாந்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இம்முறை சந்தேகத்திற்குரிய பொது சுகாதார பரிசோதகர் பரிசோதனை செய்வதை தவிர்ப்பதற்காக உணவகத்தின் உரிமையாளரிடமிருந்து 02 லட்சம் ரூபா கோரியுள்ளார்.
அதன்படி நேற்று குறித்த உணவகத்திற்கு சென்ற அவர், சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் அந்த தொகையை பெற்றுக்கொள்வதற்காக உணவகத்தின் பணியாளர் ஒருவரை தனது வீட்டிற்கு அருகில் அழைத்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.