மன்னாரில் 14 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம்

மன்னாரில் 14 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை  மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக  14 ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த  போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகிறது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு  ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார்  கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்  போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை  மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்கள் முழுமையாக கைவிடப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This