தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை
போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று மாலை ஆறு மணி வரை முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Share This