சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு – ரணில், சஜித், நாமலின் உருவ பொம்மைகள் எரிப்பு

லிந்துல -நாகசேனா தோட்ட தொழிலாளர்கள் 1750 ரூபா சம்பளத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
தலவாக்கலை -லிந்துல நாகசேன தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை நாகசேன நகர வளாகத்தில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நாளாந்த ஊதியமான 1,750 ரூபாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.
150 தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தனர்.
போராட்டத்தின் போது, தொழிலாளர்கள் சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.
தோட்டங்களில் உள்ள அரசியல்வாதிகள் இதுவரை தங்களின் சம்பளத்தை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டுமே தோட்டங்களுக்கு வருகிறார்கள், எங்களின் குறைகளை கவனிக்கவே இல்லை.
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட 1,750 ரூபா திட்டத்தை அனைத்து அரசியல்வாதிகளும் உடனடியாக ஆதரிக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 1,750 சம்பளம் பெற்றுக்கொடுக்க அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
