பிரபல போதைப்பொருள் வியாபாரி லொகு பெடிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிரபல போதைப்பொருள் வியாபாரியான லொகு பெடியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை (24) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சிறையில் உள்ள லொகு பெடி மற்றும் பூசாரி ஆகிய சந்தேகநபர்கள், ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இந்நிலையில் லொகு பெடி மற்றும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசாரிக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 54(a)இன் கீழ் சந்தேக நபர்கள் இருவரையும் விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
