ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி அலைகள் மூன்று அடி உயரம் வரை உருவாகலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அலைகள் உடனடியாக வரக்கூடும் என்பதால் கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 90 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
