இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

ராகம வைத்தியசாலை வாயிலுக்கு அருகில் 200,000 லஞ்சம் ரூபா பெற்ற குற்றச்சாட்டில் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நபரொருவரிடமிருந்து இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய அதிகாரியைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.