ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் தாக்கப்பட்ட பொலிஸ் – ஒருவர் கைது

ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் தாக்கப்பட்ட பொலிஸ் – ஒருவர் கைது

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் களுத்துறை முன்னாள் நகர சபை உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. மேலும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரியை போத்தலால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share This