விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

சந்திரயான் வெற்றிக்குபின் இந்திய விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று, மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி வானொலியில் மக்களுடன் பேசி வருகிறார்.
இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியின் 124 ஆவது தொடரில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.
சந்திரயான் திட்ட வெற்றிக்கு பிறகு, அறிவியல், விண்வெளி பற்றி குழந்தைகளிடையே புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மராட்டிய இராணுவ நிலப்பரப்பும், தமிழகத்தில் செஞ்சி கோட்டை பாரம்பரிய நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர்
மோடி இந்த முறை, உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டி அமெரிக்காவில் நடைபெற்றதாக கூறினார்.
இந்த போட்டியில் இந்தியா வரலாறு படைத்ததாகவும் சுமார் 600 பதக்கங்களை வென்றதாகவும் அவர் கூறினார்.
2029 ஆம் ஆண்டில், இந்த விளையாட்டுகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர்களுக்கு
நமது விளையாட்டு கலாசாரத்தை அறிமுகப்படுத்துவோம் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.