ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவிய நபர் கைது

ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவிய நபர் கைது

கொழும்பு – ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்கரை 95 வத்தைப் பகுதியில், குறித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபரை, ஐஸ் போதைப்பொருள் கிராம் 24 மில்லிகிராம் 300 உடன் கைது செய்துள்ளனர்.

24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று மாளிகாகந்தைநீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு குழந்தைகள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )