தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹொக்கி உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகல்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹொக்கி உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகல்

இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடரில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடர் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி தகுதி பெற்றிருந்தது. பாகிஸ்தான் “பி” பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் இந்தியா, சிலி, சுவிட்சர்லாந்த அணிகள் இடம் பிடித்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானுக்குப் பதிலாக விரைவில் புதிய அணி அறிவிக்கப்படும் என சர்வதேச ஹொக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தது. இதனால் இந்திய அணிகள் விளையாடும் போட்டிகள் டுபாய்க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ஹொக்கி அணி இதற்கு முன்னதாக பீகாரில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இருந்து விலகியிருந்தது. தற்போது 02 ஆவது முறையாக விலகியுள்ளது.

Share This