பஹல்காம் தாக்குதல் – மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்

பஹல்காம் தாக்குதல் – மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கமைய காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் இந்த மூடப்படும் பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில், தூஷ்பத்ரி, கோகேர்நாக், துக்சும், சின்தான் டாப், அக்சாபால், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் தோஸ்மைதானம் ஆகியவை அடங்குகிறது.

தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபல மொகல் தோட்டங்களுக்குச் செல்வதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் அந்தப் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (22.04.25) ஜம்மு காஷ்மீரின் பஹல்காமுக்கு அருகில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This