இலங்கை சிறைச்சாலைகளில் இடநெரிசல் அதிகரிப்பு

இலங்கை சிறைச்சாலைகளில் இடநெரிசல் அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக தடுப்பு மையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போதைப்பொருள் சோதனைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 10,350 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது கிட்டத்தட்ட 37,000 பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.

அவர்களில் பெரும்பாலோர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பூசா சிறையில் லோகு பட்டி அடைக்கப்பட்டுள்ள அறையில் கையடக்க தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

Share This