அஸ்வெசும கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 12 பில்லியனுக்கும் அதிகமான தொகை பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,732,263 குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபா உதவித்தொகை நாளைய தினத்திற்கு வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பயனாளர்களும் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து நாளைய தினம் உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

CATEGORIES
TAGS
Share This