வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 2295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும்,எதுவிதமான உயிரிழப்புகள் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அனர்த் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.