
சீரற்ற வானிலையால் 11,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 3,064 குடும்பங்களைச் சேர்ந்த 11,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
