ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுக் கூடியுள்ளோம் – மைத்திரி

ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுக் கூடியுள்ளோம் – மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும்
அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கொழும்பில் இன்று காலை ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போதே
மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயம்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில்  தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுக் கூடியுள்ளோம்.

எமது அரசியல் கொள்கையில் நாம் கவலையடைந்திருக்கிறோம், சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம்.  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தும் வருகின்றோம்.

அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஹரின் பெர்னாண்டோ மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊடக சந்திப்பில் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தையை விமர்சித்த அரசியல்வாதிகளும்  கலந்துக்கொண்டனர்.

Share This