மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப்பாலம் அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச போக்குவரத்து பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களை செலுத்திய நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் விசேட தேவையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.