யாழில் ஒருவர் அடித்துக்கொலை

யாழில் ஒருவர் அடித்துக்கொலை

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் குறித்த குடும்பஸ்தரை தாறுமாறாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This