ஒரு மில்லியன் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்

சுமார் ஒரு மில்லியன் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளதாக , பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் பதிவுப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பமானது.
இந்தச் செயன்முறையின் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
முக அங்கீகாரம் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் தொழில்நுட்ப செயன்முறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.