முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோலின் விலை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ, முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கட்டணத்தை தீர்மானிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்திடம் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்ரோலின் விலை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாததால் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கும்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS
Share This