அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லை – நலிந்த
அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லையென சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
அரச சேவையில் மக்களை விளைத்திறனுடனும் வினைத்திறனுடனும் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.
அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எந்தெவொரு எதிர்பார்ப்பும் இல்லை.
சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவைகளை விட அரசியல் தேவைகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன
எவ்வாறு ஆட்சேர்ப்பு நடந்தாலும், அரசுப் பணியில் இணைந்து அதன் மூலம் வாழ்க்கையைத் திட்டமிட்டு,
சிலர் வங்கிக் கடன் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்காக அரசாங்கம் அதிக பணம் செலவிடுகிறது. பொது சேவையானது பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க நிர்வகிக்கப்படுகிறது. அரசு சேவை மிகவும் சுமையாக உள்ளது, அதற்காக அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது அர்த்தமல்ல” என அமைச்சர் மேலும் கூறினார்.