வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம்

வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய காவற்படையினர் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய செவ்வாய்க்கிழமை மாலை, தலைநகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்களிலும் நகர்ப்புற மையங்களிலும் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சுமார் 800 தேசிய காவல்படை உறுப்பினர்கள் மற்றும் 500 கூட்டாட்சி சட்ட அமலாக்க அதிகாரிகள நகரத்தில் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் சர்வாதிகாரம் என வொஷிங்டன் டி.சி. மேயர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வொஷிங்டனில் குற்றங்கள் கட்டுப்பாட்டை மீறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக அமையலாம் என கூறப்படுகிறது.

Share This