கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள்  செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க
தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன்காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக கற்களை உடைக்கும் இயந்திரம் ஒரு வருடத்திற்கு முன்பு பெறப்பட்ட போதிலும்
இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This