தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – சபாநாயகரின் விசேட அறிவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கடந்த மாதம் 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
இந்த பிரேரணையில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். பதவியை துஷ்பிரயோகம் செய்தமை, கடமையை சரியாக செய்ய தவறியமை, பதவியில் செயற்படும்போது மிகவும் மோசமான முறையில் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.
நாளை வியாழக்கிழமை வரை (03.04.25 ) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேஷபந்து கண்டி தும்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.