பயணப்பையிலிருந்த கண்டெடுக்கப்பட்ட நூறிற்கும் மேற்பட்ட தோட்டாக்கள்

பயணப்பையிலிருந்த கண்டெடுக்கப்பட்ட நூறிற்கும் மேற்பட்ட தோட்டாக்கள்

பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந் பயணப்பை சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ் ஒன்று நேற்று சனிக்கிழமை (22) பிற்பகல் பண்டாரவளை பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 123 செயற்படக்கூடிய தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும், சந்தேகத்திற்குரிய எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த தோட்டக்களில் 113 பிஸ்டல் தோட்டாக்கள், 9 T56 தோட்டாக்கள் மற்றும் T56 LMG தோட்டா ஒன்றும் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This