61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

இன்று பிற்பகல் 03 மணியுடன் நிறைவடைந்த 43 மணி நேரத்திற்குள் இலங்கையில் 61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளை பாதித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 23,227 இடங்களில் ஏற்கனவே மின் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
பாதகமான வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான மின் தடைகள் பதிவாகியுள்ளன.
மீதமுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க தொடர்ச்சியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விமலரத்ன தெரிவித்தார்.
மறுசீரமைப்பு முயற்சிகளின் போது வைத்தியசாலைகள் உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
நாளொன்றுக்கு நாட்டில் 4,500 மின் தடைகளின் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.