
ஓய்வை அறிவித்தார் மோகித் சர்மா!
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மோகித் சர்மா அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து சமூக ஊடகங்களில் விடுத்துள்ள பதிவில்,
“இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்.
அரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம்.
தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மோகித் சர்மா, இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எட்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடர்களில் சென்னை உள்ளிட்ட அணிகளுக்காக 120 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
